Friday, 7 April 2017

Manufacturer & Parts of Oil Mill Rotary

Tags






















RKR EDIBLE OIL

Monday, 13 March 2017

உண்மையான விலை என்ன? எவ்வளவு? ஏன்?

Tags
உண்மையான விலை என்ன? எவ்வளவு? ஏன்?
நல்லெண்ணெய் ( எள்ளு எண்ணைய் )
தரமான எள்ளு கிலோ ரூ.100/- (1-3-2017 )
இதனுடன் பனங்கருப்பட்டி நூறு கிராம் சேர்க்க வேண்டும். பனங்கருப்பட்டி கிலோ ரூ 250/- ஒவ்வொரு கிலோ எள்ளுக்கும் நூறு கிராம் சேர்க்க ரூ 25/-

ஒரு லிட்டர் நல்லெண்ணெய் எடுக்க செக்கில்
ஆட்டினால் 2 கிலோ 500 கிராம் எள்ளு தேவை.
ஆக 225+50=275ரூபாய் ஆட்டுக்கூலி+45
320 - புண்ணாக்கு 40 ஆக 280-300 ரூபாய்க்கு விற்க்க வேண்டும்
ஆனால் மிகக்குறைவாக அதாவது ரூ.190/- ரூ.220/- ரூ.240/- விலைகளில் விற்கப்படுகிறதே எப்படி?
சிந்திப்போம் ஒரிஜினல் நல்லெண்ணெய் எது என்று மக்கள் தேடுவதில்லை, மாறாக விலை குறைவாக எங்கு கிடைக்கும் என்று தேடுவதால் வியாபாரிகள் கலப்பட எண்ணைய் விற்கிறார்கள். இதில் காலக்கொடுமை என்னவென்றால் தரமான எண்ணைய் என்ன கலரில், என்ன வாசனையில் இருக்கும் என்றே பலருக்கு தெரிவதில்லை. விலை குறைய குறைய அது நல்லெண்ணெய்யே இல்லை என்பதை உணர்வீர்களா..........!!!!!

கெட்டுபோனால் உதிரிபாகங்களை கொண்டு புதுபிக்கக்கூடிய பைக் மற்றும் கார்களுக்கு கூட நல்ல தரமான ஆயில் வேண்டும் என்று கேட்கும் நாம், இறைவன படைத்த சரீரத்துக்கு ( கெட்டுபோனால் போனதுதான் ) தரமான செக்கு தாவர எண்ணைய்களை உட்கொள்வோம் ஆரோக்கியம் காப்போம்.

மர செக்கில் ஆட்டிய சுத்தமான
1.நல்ல எண்ணெய் (பணங்கருப்பட்டி சேர்த்து ஆட்டியது)
2.கடலை எண்ணெய்
3.தேங்காய் எண்ணெய் கிடைக்கும்

Tuesday, 14 February 2017

what is King of edible oil, queen of edible oil

Tags
                   
RKR EDIBLE OIL
RKR EDIBLE OIL
    சமையல் நிறுவனம் மரசெக்கு  எண்ணெய் ஒரு சிறப்பு பார்வை !!!!!

'வைத்தியருக்குக் கொடுக்கிற காசை, வாணிகருக்குக் கொடு’ இது, மரச் செக்கில் பிழியும் எண்ணெயின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக சொல்லப்பட்ட பழமொழி.

ஆனால் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் வாணிகனை விட சொற்ப லாபம் ஈட்டும் இந்த விவசாயிக்கு ஒரு வாய்ப்பு கொடு.

நாங்கள் தரம் பதித்த முதல் தர வித்துகளையே பயன்படுத்துகிறோம்.

நான் சில நாட்கள் முன்பு நான் கோவையில் உள்ள நவீன மரசெக்கு கடைக்கு சென்றேன். அங்கு கடலெண்ணய் விலையை கேட்டேன். அவர் என்னிடம் ரூ. 270 என்று கூறினார் . இன்னொருவர் ரூ. 300 என்கிறார்.
அவரிடம் ஏன் இவ்வளவு விலை என்று  வினவினேன் ??? அதற்கு அவர் வேர்கடலை வித்தின் ஒரு கிலோ வின்  விலை ரூ. 105  என்று கூறினார்.

எனக்கு ஒரு சந்தேகம் வித்துகளை அவர்கள் உள்நாட்டில் வாங்குகிறார்களா ???? அல்லது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறார்களா? ????

விவசாயிக்கு அதிக லாபம் தேவையில்லை, பொருளுக்கேத்த ஊதியம் போதும்.

நாங்கள் உங்களை ஏமாற்ற வில்லை. தரமான எங்கள் பாரம்பரிய முறைப்படி தயாரிக்கும் கடலெண்ணய் ஒரு தடவை உபயோகித்து பார்த்து உங்கள் முடிவை தாரளமாக சொல்லலாம்.

‘கண்ட எண்ணெயைப் பயன்படுத்தி, பிணிக்கு ஆளாகி, வைத்தியம் பார்ப்பதைவிட, மரசெக்கு மூலமாக தயாரிக்கப்படும் தரமான எண்ணெயை வாங்கி ஆரோக்கியத்தைப் பேணுவதே மேல்’ என்பதுதான் இந்தப் பழமொழியின் பொருள்.

நம்மில் பலருக்கு வெளிநாட்டு மோகம் அதிகம். உள்நாட்டு சரக்குகளின் மதிப்பை அறிவதில்லை.
உணவை மருந்தாக உண்டு கொண்டிருந்த நாம், இன்று நம்மில் பலர் வெளிநாட்டு மோகத்தால் மருந்தை உணவாக உண்டு கொண்டு இருக்கிறோம்.

நம் முன்னோர்கள் பின்பற்றிய பாரம்பர்யமான விஷயங்களைக் கைவிட்டு அனைத்திலும் நவீனத்தை ஏற்பதுதான் நாகரிகம் என நினைக்கிறோம்.

அதனால் நாம் இழந்தவை, இழந்து கொண்டிருப்பவை ஏராளம். அப்படி இழந்தவற்றில் முக்கியமானது மரச் செக்கில் பிழியும் எண்ணெய்.

மரச்செக்குகளில் ஆட்டிப் பிழியப்படும் எண்ணெய் உடலுக்கு நல்லது. ஆனால், ‘ரோட்டரி’ எனப்படும் நவீன எண்ணெய் பிழியும் இயந்திரங்களின் வருகையால் மரச் செக்குகள் வழக்கொழிந்துவிட்டன.

வேர்கடலை கொழுப்பு அல்ல ...!
ஒரு காயகர்ப்பம் மூலிகை…!!

மரச் செக்கு எண்ணெயின் மகத்துவத்தை உணர்ந்தவர்கள், குறிப்பாக, இயற்கை விவசாயத்தைத் தீவிரமாக நேசிப்பவர்கள் கவனதிற்கு.

நாங்கள் உற்பத்திசெய்த நிலக்கடலையை எங்கள் செக்குகளில் ஆட்டப்பட்டு, பாரம்பரிய முறைப்படி சுத்திகரிப்பு செய்து, தருகிறோம்.

பாரம்பரிய முறைப்படி சுத்திகரிப்பு செய்ய விசாலமான இடத்தில் தான் செய்ய முடியும். அதற்க்கு மிகப்பெரிய
செம்பு பாத்திரங்கள் தேவை.

நம் முன்னோர்கள் அந்த காலத்தில் செக்கில் ஆட்டி எடுத்த வேர்கடலை எண்ணெயை அப்படியே உபயோகித்தனர்.இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும்,நிறமாகவும்,மணமாகவும்இருக்கும். இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள் தான்.

இந்த தாதுப்பொருட்கள் மூலம் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருள்கள் மூட்டுகளுக்கு சென்று. எலும்பு தேய்மானத்தை தடுத்தன.இதை உணவுக்கு மட்டுமின்றி. குளியலுக்கும்,மசாஜ் செய்வதற்க்கும் உபயோகித்த காரணத்தால் அவர்கள் 80 வயது வரை மூட்டுவலியின்றி கால்நடையாகவே சென்று வந்தனர்.

அதனால் தான் எல்லாம் இந்த மகத்துவத்தை அறிந்த ஆங்கிலேயர்கள் கடலை எண்ணெய்யை


what is King of edible oil, queen of edible oil?

" King of Oil " என்று புகழாரம் சூட்டினார்கள். நல்லெண்ணெய்யை " Queen of Oil " என்று அழைக்கிறர்கள்.

வாழ்க வளமுடன் வேதாத்திரி மகரிஷியே எனது குரு. அவரின் கூற்றுப்படி என்னால் முடிந்த அளவுக்கு எனது சேவையை இந்த சமுதாயத்திற்கு அர்பணிக்கிறேன்.

நான் தரத்தை என்றுமே தாழ்த்தி கொள்ள மாட்டேன்! ! விலையையும் குறைவாக தான் தரு்கிறேன்.! !

என் தரமான வித்துக்கும், எனது செக்குக்குரிய சிறிய பராமரிப்பு செலவுக்கும், எனக்கு தகுந்த சொற்ப லாபம், எனக்கு நிறைவானதாகும்.

எங்கள் நோக்கம் உயர்ந்த தரம், குறைந்த லாபம், ஆரோக்கியமான வாழ்க்கை, உங்கள் வாழ்த்து.

வாழ்க வளமுடன்! ! வாழ்க வளமுடன்! !

எங்கள் மரசெக்கு கடலை எண்ணெய் விலை Rs. 220 மற்றும் செக்கு எண்ணெய் விலை Rs.170.

Health benefits of marachekku oil மரசெக்கு கடலெண்ணய் பற்றி சித்த மருத்துவர் உமா வளவனின் ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் ஆலோசனை.

Tags
RKR EDIBLE OIL
மரசெக்கு கடலெண்ணய் பற்றி சித்த மருத்துவர் உமா வளவனின் ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் ஆலோசனை.

1.மரசெக்கு வேர்க்கடலை எண்ணெய் என்றதுமே முதலில் நினைவுக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான், இதனால் உடல் பருமன் கூடும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும், இதய நோய்கள் போன்ற பிரச்சனைகள் வரும் என்ற நம்பிக்கை தான் இருந்துவருகின்றது ஆனால் வருகின்ற ஆராய்ச்சிகளில் இந்த நம்பிக்கைகளுக்கு எந்த ஒரு ஆதாரமுமில்லை என்றே தெரிகிறது .

2.காரணம் மரசெக்கு வேர்கடலை எண்ணெயில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்தும் அதனுடன் அதிகமான புரத சத்தும் இருக்கின்றபடியால் அவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை.

3.முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த ஆரோக்கியமான உணவாகும்.

ஏனெனில் இதிலுள்ள சர்க்கரையின் அளவு இரத்தத்தில் மிக மிக குறைந்த அளவே சேருவதால் பயமில்லாமல் சாப்பிடலாம்.

4.மேலும் இதில் இருக்கும் மெக்னீஷியம் என்ற வேதிப்பொருள் இன்சுலினை சுரக்கச் செய்யும் ஹார்மோனை துரிதப்படுத்தி சர்க்கரையின் அளவை கட்டுபடுத்துகிறது.

5.ஆகவே இவர்கள் அன்றாட உணவில் தைரியமாக மரசெக்கு வேர்க்கடலை எண்ணெய்யை சேர்த்துக் கொள்ளலாம்.

6. மரசெக்கு வேர்க்கடலை எண்ணெயில் ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியத்தின் அளவு மிகவும் குறைவாக காணப்படுவதால் வேர்க்கடலை சாப்பிடுபவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்காது.

மாறாக ரத்த கொதிப்பு குறையும். மரசெக்கு வேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் என்ற வேதிப் பொருள் உள்ளது.

7. இவை மரசெக்கு  வேர்க்கடலை எண்ணெய்யைச் சாப்பிடுவதன்மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்வதால் ரத்த ஓட்டம் சீராகிறது ,மேலும் இதில் காணப்படும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் போன்ற உயிர் வேதிப் பெருட்கள் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் உருவாக்காமல் தடுக்கிறது.

8. மரசெக்கு வேர்க்கடலை எண்ணெய்ல்  நார்ச்சத்து மிகுந்த உணவு என்பதால் மரசெக்கு வேர்க்கடலை எண்ணெய் சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது

ஆகவே கர்ப்பிணிகள் கூட வேர்க்கடலை எண்ணெயை சாப்பிடுவது நல்லது.

9.மேலும் மரசெக்கு வேர்க்கடலை எண்ணெய்யைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட,  மரசெக்கு வேர்க்கடலை எண்ணெய்யை பொறித்தோ, வறுத்தோ சாப்பிடுவதால் சிலருக்கு ஏற்படும் அஜீரணத்தை தவிர்க்கலாம்.

10. பொதுவாக உடல் எடையை குறைப்பவர்கள் நொறுக்கு தீணியை மற்ற எண்ணெய்ல செய்வதற்கு பதிலாக மரசெக்கு வேர்க்கடலை எண்ணெய்ல செய்து சாப்பிடலாம், ஏனெனில் இவை சாப்பிட்ட திருப்தி விரைவிலேயே கிடைப்பதால் மேலும் மேலும் எதையாவது சாப்பிட்டு உடல் எடையைக் கூட்டும் நிலை வராது.

11.இதிலுள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் முதுமையில் ஏற்படும்   ஆஸ்டியோபோரோசிஸ் என்ற எலும்பு சம்பந்தமான நோயையும் தடுக்க உதவுகிறது

12. மரசெக்கு வேர்க்கடலை எண்ணெயில் இருக்கும் சில வேதிப் பொருட்கள் புற்றுநோய், உருவாகக் காரணமாகும் செல்களை அழித்துவிடுகின்றன.

குறிப்பாக மலக்குடல் புற்றுநோய் உருவாகாமல் தடுக்கிறது.

13.மேலும் பார்க்கின்ஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க மரசெக்கு வேர்க்கடலை எண்ணெய் உதவுகிறது.

14. மரசெக்கு வேர்க்கடலை எண்ணெயில் உள்ள உயிர் வேதிப் பொருள்கள் நரம்பு செல்களை நன்றாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன.

அதனால் நரம்புகள் நன்றாகக் செயல்படுவதால் அது தொடர்புடைய நோய்கள் குறைந்து விடுகிறது.

15.உலகம் முழுவதும் எளிதில் தங்கு தடையின்றிக் கிடைக்கும் முக்கியமான ஊட்டச்சத்து உள்ள உணவுப் பொருள்களுள் மரசெக்கு  நிலக்கடலை எண்ணெய்யும் ஒன்றாகும்.

16. மரசெக்கு வேர்க்கடலை எண்ணெயில் உள்ள புரதம் சரிவிகிதமாக அமைந்திருக்கிறது.

எனவே, குழந்தைகள் வளர்ச்சி தடையின்றி இருக்க மரசெக்கு  நிலக்கடலை எண்ணெய் நல்லது.

17. சோயாபீன்ஸிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதம், மரசெக்கு வேர்க்கடலை எண்ணெயில்தான் இருக்கிறது.

18. முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதம் மரசெக்கு வேர்க்கடலை எண்ணெயில் இருக்கிறது.

19. மூளைச் சுறுசுறுப்பிற்கு உதவும் பாஸ்பரஸ், உப்பு, பற்கள் மற்றும் எலும்புகளின் பலத்திற்கு கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்களும் மரசெக்கு வேர்க்கடலை எண்ணெயில் உள்ளன.

20.எல்லாவிதமான இரத்தப்போக்குகளையும் இது தடுக்கும்.

பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவு மரசெக்கு  வேர்கடலை எண்ணெயாயாகும்.

21.பெருந்தீனிக்காரர்களும், உடல் பருமன் உள்ளவர்களும், உணவில் மற்ற எண்ணெய்களை  குறைத்து உடல் மெலிய விரும்பினால், சாப்பாட்டுக்கு சமையல் நிறுவனத்து மரசெக்கு கடலெண்ணய்  சாப்பிடவும்.

22. இத்துடன் சீனி சோக்காத காபி அல்லது டீ அருந்தவும்.

இதன் பொருட்டு உடல் எடையும் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும்.

23.வயிற்றுப்போக்கு உடனே கட்டுப்படவும், பற்கள் பலம் பெறவும் சமையல் நிறுவனம் வேர்க்கடலை எண்ணெய் சாப்பிடுவது நல்லது.

24.எல்லாவற்றையும்விட முக்கியமானது உடல் அழகும், இதயப் பாதுகாப்பும்.

25. மரசெக்கு வேர்க்கடலை எண்ணெயில் உள்ள நியாஸின், தோலில் உள்ள புண்கள், கொப்புளங்கள் ஆறவும், இவை வராமல் முன்கூட்டியே தடுப்பதுடன், பளபளப்பான தோலையும் ஏற்படுத்தித் தருகிறது.

26. படிக்கும் மாணவ, மாணவியர் சமையல் நிறுவனம் வேர்க்கடலை எண்ணெய்யை தொடர்ந்து சாப்பிடுவதால் ஞாபக மறதி ஏற்படாது என்பதே, எனது உணவு ஆய்வின் முக்கிய குறிப்பு.

27.சமையல் நிறுவனம் மரசெக்கு  வேர்க்கடலை எண்ணெயில் உள்ள உயிர்வேதிப்பொருட்கள் நரம்பு செல்களை நன்கு செயல்படத் தூண்டும்.

இதனால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புள்ள பார்க்கிஸன், அல்ஸமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்கும்.

மேலும், நரம்பு சம்பந்தமான நோய்களை வராமல் தடுக்கும் ஆற்றலும் சமையல் நிறுவன மரசெக்கு வேர்க்கடலை எண்ணெக்கு உண்டு. சமையல் நிறுவன மரசெக்கு வேர்க்கடலை எண்ணெயில் 30 விதமான ஊட்டச் சத்துக்கள் உள்ளன.

28. நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் இருந்து ரத்தத்தில் சேரும் சர்க்கரையின் அளவை `கிளை செமிக் இன்டெக்ஸ்’ என்பார்கள்.

இது சமையல் நிறுவன மரசெக்கு வேர்க்கடலையி எண்ணெய்ல் மிகவும் குறைவு என்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது.

29. மேலும், வேர்க்கடலையின் மேல் உள்ள பிங்க் கலர் தோலுக்கு நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு.

30. அதுமட்டுமின்றி, சமையல் நிறுவன மரசெக்கு வேர்க்கடலை எண்ணெயில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலின் சுரக்கும் ஹார்மோன்களை துரிதப்படுத்தும் சக்தி உள்ளது.

31.கர்ப்பிணிகள் சமையல் நிறுவன மரசெக்கு  வேர்க்கடலை எண்ணெய்யை சாப்பிடுவதால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நரம்புக் கோளாறுகள் ஏற்படாது.

32.சமையல் நிறுவனம் மரசெக்கு வேர்க்கடலை எண்ணெயில் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமான வைட்டமின் ஏ மற்றும் நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகம் உள்ளன.

33. சமையல் நிறுவனம் மரசெக்கு கடலெண்ணய்ல் ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியம் குறைவு.

இதனால் சமையல் மரசெக்கு வேர்க்கடலை எண்ணெய் சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காது.

இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கல் ஏற்படாது.

வேர்க்கடலையில் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் இருப்பதால் உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றிவிடும்.

தினமும் 50 கிராம் மரசெக்கு வேர்க்கடலை எண்ணெய் சாப்பிடுவது  மிகவும் இன்றியமையாதது.

வேர்க்கடலையின் தோலை நீக்காமல் எண்ணெய் பிழிய வேண்டும்.

எனவே மரசெக்கு வேர்க்கடலை எண்ணையையே சாப்பிட வேண்டும். சாப்பிடுவதால் நூறு சதவீதம் உடலுக்கு 

Tuesday, 31 January 2017

ஆயில் புல்லிங oil pulling health benefits

Tags
ஆயில் புல்லிங.

ஆயில் புல்லிங் என்பது ஒரு ஆயுர்வேத சிகிச்சை முறை. இந்த சிகிச்சை முறையின் மூலம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக் காணலாம்.

 ஆயில் புல்லிங் என்பது வேறொன்றும் இல்லை, காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் வாயில் எண்ணெயை ஊற்றி 10-15 நிமிடம் கொப்பளிக்க வேண்டும்,

அவ்வளவு தான். மேலும் ஆயில் புல்லிங் செய்த பின்னர் தான் பிரஷ் செய்ய வேண்டும். அதிலும் ஆயில் புல்லிங் செய்வதற்கு நல்லெண்ணெயைப் பயன்படுத்தினால், இன்னும் நல்ல பலனைப் பெறலாம்.

மேலும் ஆய்வு ஒன்றில், ஆயில் புல்லிங் செய்து வந்தால், வாய் ஆரோக்கியம் மேம்படும் என்று சொல்கிறது.

 ஆனால் ஆயில் புல்லிங்கினால் வாய் ஆரோக்கியம் மட்டுமின்றி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரித்து,

 உடலில் ஏற்படும் ஒருசில பிரச்சனைகளையும் குணப்படுத்தி, ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.

 அதுவும் தற்போதுள்ள ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையில், இந்த ஆயில் புல்லிங் சிகிச்சையை ஒருவர் தினமும் தவறாமல் செய்து வந்தால், உடல்நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

சரி, இப்போது அந்த ஆயில் புல்லிங்கை தினமும் செய்து வந்தால் கிடைக்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி பார்ப்போமா!

வெள்ளையான பற்கள் மற்றும் ஆரோக்கியமான ஈறுகள்

தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், பற்களில் உள்ள கறைகள் நீங்கி, பற்கள் வெள்ளையாகவும், ஆரோக்கியமானதாகவும் காணப்படும்.

வாய் துர்நாற்றம்

 தினமும் காலையில் ஆயில் புல்லிங் செய்து வந்தால், வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேறி, வாய் துர்நாற்றம் அடிக்காமல் இருக்கும்.

ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவு

 ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்பட்டால், ஆயில் புல்லிங் செய்தால், இரத்தக்கசிவு ஏற்படுவது தடுக்கப்பட்டு, ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும்.

 உடலின் எனர்ஜி அதிகரிக்கும்

ஆயில் புல்லிங்கை தினமும் செய்தால், உடலின் ஆற்றலானது அதிகரித்து, நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன் இருக்கலாம்.

ஒற்றை தலைவலி

 ஒற்றை தலைவலியால் அவஸ்தைப்படுபவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், அந்த தொல்லையில் இருந்து விடுபடலாம்.

சைனஸ்/ஆஸ்துமா

 சைனஸ்/ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்தால், இந்த பிரச்சனைகள் குணமாகும்.

நிம்மதியான தூக்கம்

 தூக்கமின்மையால் அவஸ்தைப்படுபவர்கள் ஆயில் புல்லிங் செய்தால், இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

பொலிவான சருமம்

 ஆயில் புல்லிங் செய்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, சருமம் பொலிவோடு இருக்க உதவும்.

முறையான மாதவிடாய் சுழற்சி

முறையற்ற மாதவிடாய் சுழற்சி உள்ளவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்தால், ஹார்மோன் சமநிலையின்மை குணமாகி, சரியான மாதவிடாய் சுழற்சி ஏற்படும்.

தைராய்டு தைராய்டு உள்ளவர்கள்

, ஆயில் புல்லிங் செய்து வந்தால், தைராய்டு ஹார்மோனை சீராக சுரக்க செய்து, தைராய்டு பிரச்சனையைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

பார்வைக் கோளாறு

 பார்வைக் கோளாறு இருந்தால், ஆயில் புல்லிங் செய்து வர, பார்வைக் கோளாறானது சரியாகும்.

மூட்டு பிரச்சனைகள்

 மூட்டுகளில் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், அது மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், வலியை குணமாக்கும்.

 சிறுநீரக செயல்பாடு

 தினமும் ஆயில் புல்லிங் செய்தால், சிறுநீரக கோளாறு ஏற்படாமல், சிறுநீரகமானது சீராக செயல்படும்.

வறட்சிகளைப் போக்கும்

 தொண்டை வறட்சியால் அடிக்கடி இருமல், வாய் மற்றும் உதடுகள் அடிக்கடி வறட்சி அடைந்தால், தினமும் ஆயில் புல்லிங் செய்துவர தடுத்துவிடலாம்.

*இயற்கை மருத்துவம்