மீண்டும் எண்ணெய் செக்கு ஆலைகளை தேடுவோமா?
செக்கு என்பது எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுக்கும் ஒரு கருவி ஆகும்.
இதனை பெரும்பாலும் கிராமங்களில் சமையல் எண்ணெய் எடுக்க பயன்படுத்துகின்றனர். செக்கானது மரத்தாலோ கல்லாலோ செய்யப்பட்டிருக்கும். மாடு முதலான விலங்குகள் ஆரம்பத்தில் பயன்பட்டது. ஆயினும் தற்காலத்தில் சுவட்டு எரிபொருள் மற்றும் மின்சாரத்தால் இயங்கும் செக்குகள் நடைமுறையில் உள்ளன.
மாடுகளால் இழுக்கப்படும் செக்கின் அடிமரம் பொதுவாக புளிய மரத்தின் தண்டில் இருந்து செய்யப்படுகிறது. அத்துடன் கடையும் அச்சு முதிரை பாலை மரங்களில் இருந்து செய்யப்படுகிறது. வாகை மரமும் புழக்கத்தில் இருப்பதாக அறிந்தோர் செய்திகள் அளிக்கின்றனர்.
.
செக்கில் எண்ணெய் பிழியும் தமிழர் மரபு
1950 ஆம் ஆண்டிற்கு முன்பு எண்ணெய் பிழிய செக்கு என்ற கருவியே பயன்பாட்டில் இருந்தது. கடந்த பல தாசப்தங்களாக மரச்செக்குகளில் தான் எள்ளை போட்டு ஆட்டி எண்ணெயை பிழிந்து எடுத்து மக்களுக்குத் தந்தார்கள். மதுரையில் 120 ஆண்டுகளாக செக்கில் எண்ணெய் பிழிந்து தந்த வியாபார நிறுமங்கள் உண்டு.
செக்கில் இடப்படும் எள்ளுடன் கருப்பட்டியை சேர்த்து சிறிதுசிறிதாக ஒரே வேகத்தில் மரத்திலான செக்குகளை சுழல வைப்பதன் மூலம் எள்ளில் இருந்து எண்ணெய் சிறிது சிறிதாக வெளியே வரும்.
மரச்செக்கிலிருந்து பிழியப்பட்டு வரும் எண்ணெயை பித்தளையால் ஆன பாத்திரத்தில் தான் வடித்தெடுப்பார்கள். அதுவும் குறிப்பாக இந்த எண்ணெயை எடுத்து ஊற்ற பயன்படும் பித்தளை பாத்திரமாக இருக்கும் .
இதன் அறிவியல் தத்துவார்ந்த ரீதியாக இந்த பயன்படுத்தும் முறை நிருபிக்க விட்டாலும் மரச்செக்கில் கருப்பட்டியுடன் சேர்த்து ஆட்டப்பட்ட எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணையை, பித்தளையில் ஈயம் பூசப்பட்ட பாத்திரத்தின் மூலம் செக்கிலிருந்து எடுத்து ஊற்றி சில்வர் பாத்திரத்தில் சேமிக்கப்படும் நல்லெண்ணெய்க்கு சில அபாரமான குணங்கள் இருப்பதை நடைமுறையில் தெரிந்து வைத்திருக்கின்றார்கள் பழங்கால எண்ணெய் வியாபாரிகள்.
செக்கு நல்லெண்ணெய்க்கும் பாக்கெட் நல்லெண்ணெய்க்கும் உள்ள வேறுபாடு
பெரிய பெரிய எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் பெரிய இரும்பு உலக்கைகளை கொண்டு எள்ளை ஆட்டி எண்ணெய்யை பிழிவார்கள். அப்போது கடுமையான வெப்பம் இந்த உலக்கை உருளைகளுக்கு இடையே ஏற்படுவதுண்டு. அந்த வெப்பத்தால் இயற்கையாகவே நல்லெண்ணெயில் மறைந்திருக்கும் சில அதிசயமான குணசாங்கள் குறைந்து போய்விடும்.
ஆனால் மரச்செக்கில் கருப்பட்டியுடன் சேர்த்து எள்ளை ஆட்டும் போது மரச்செக்கில் அவ்வளவாக வெப்பம் ஏறாது. அப்படியே ஏறும் குறைந்த வெப்பத்தையும் இந்த கருப்பட்டி சரி செய்து ஒரு வெப்ப சமமாக்கல் இயற்பியல் தத்துவத்தை அங்கே செயல்படுத்துகிறது.
இதனால் இப்படி மரச்செக்கில் ஆட்டி பிழிந்தெடுக்கப்படும் நல்லெண்லெண்ய்க்கு ஒரு அபாரமான மணமும், குணமும் இருப்பது இயற்கையே" என்றார்.
உரத்த சிந்தனை
ரீபைண்ட் ஆயில் மற்றும் கடைகளில் விற்கப்படும் நல்லெண்ணெய் முதல் அனைத்து எண்ணெய்களில் அதிகம் வருவதும் நாம் சமையலில் பயன்படுத்துவதும் குரூட் ஆயில். தற்போது புதிது புதிதான நோய்களுக்கு இது மிகப்பெரிய காரணமாக இருக்கின்றது.
சூரியக்காந்தியில் இருந்து எண்ணெய் தயாரிக்க பயன்படும் அதன் விளைச்சல் என்பதே மிக சொற்பமான அளவு ஆகும் . இந்தியாவில் சில இடங்களில் பயிரிடப்படும் சூரியகாந்தியால் இந்தியாவில் சென்னை நகரில் குறிப்பிட்ட இடங்களுக்கு கொடுக்க கூட முடியாது என்கின்றார்கள் விவரம் தெரிந்தவர்கள் .
தேங்காயில் இருந்து எடுத்தால் தேங்காய் எண்ணெய் என்பார்கள்,கடலையில் இருந்து எடுத்தால் கடலை எண்ணெய் என்பார்கள் எள்ளில் இருந்து எடுத்தால் எள்எண்ணெய் என்றுதானே அழைக்க வேண்டும். ஏன் நல்லெண்ணெய் என்று அழைக்கின்றார்கள் என்ற சந்தேகம் பலருக்கும் எழும். அதற்க்கு காரணம் அதில் எல்லையில்லா நன்மையைக்கண்டு நல்லெண்ணெய் என்று அழைத்தார்கள் மூத்த குடிகள் .
பெண் குழந்தைகள் பருவமடைந்த நிலையில் அவர்களுக்கு உளுந்தை களியாக கிளறி அதில் நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட கொடுப்பார்கள். இது இடுப்பு பகுதிக்கு நல்ல வலுவை தரும் என்பார்கள். தற்போது இந்த பழக்கம் எல்லாம் மறைந்து விட்டது. இத்துடன் இந்த செக்கில் பெறப்படும் நல்லெண்ணெயும் சேர்ந்து மறைந்து விட்டது . அதனை மீண்டும் தேடி நிறுவுவது நமது கடமையாக இருக்கின்றது .

EmoticonEmoticon