Thursday, 22 December 2016

செக்கு எண்ணெய் எப்படி கிடைக்கிறது?

Tags

செக்கு எண்ணெய் எப்படி கிடைக்கிறது?

கிறிஸ்டல் கிளியர் ஆயில், வேக்ஸ் கலக்காத ஆயில் என்கிற மாயாஜால வார்த்தைகள் எல்லாம் தற்போதுதான் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றன. நம்முடைய முன்னோர்களில் ஆரம்பித்து உடல்நலனில் அக்கறைகொள்ளும் பலரும் தேர்ந்தெடுத்தது என்னவோ மரச்செக்கு எண்ணெயைத்தான்.

‘மரச்செக்கா... அப்படின்னா என்ன?’ என்பவர்களுக்கு ஒரு சின்ன விளக்கம். பெரிய கல் உரலில் மரத்தால் ஆன செக்கை பூட்டி, மாடு கொண்டு சுழற்றி சுழற்றி அரைப்பதே மரச்செக்கின் வேலை. எள் அல்லது தேங்காயயைத்தான் செக்கில் போட்டு அரைத்துப் பிழிந்து அதில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயைத்தான் மரச்செக்கு எண்ணெய் என்பார்கள். கால மாற்றத்துக்கு ஏற்ப, தற்போது செக்கை மின்சார உதவியோடு இயக்குகிறார்கள். தற்போது #மரச்செக்கு #எண்ணெய் மீதான நம்பிக்கை திரும்பிக்கொண்டிருக்கிறது. அவினாசியில் மரச்செக்கு எண்ணெய் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மஞ்சுவிடம் பேசினோம்.

“பதினஞ்சு வருசத்துக்கு முன்னாடியெல்லாம் மாடு வெச்சுதான் செக்கு ஓட்டிக்கிட்டு இருந்தோம். திடீர்னு ஒருநாள் செக்கு எண்ணெய் உடம்புக்கு நல்லது இல்லைன்னும், அதிக விலையா இருக்குதுன்னும்னு பேச்சு வந்து எங்க தொழில் நொடிய ஆரம்பிச்சது. ஒருகட்டத்துல சுத்தமா உற்பத்தியே  நின்னு போச்சு. ‘என்னடா இது நாம என்ன தப்பான பொருளையா இத்தனை நாளும் உற்பத்தி பண்ணி வந்திட்டிருந்தோம்’னு மனசளவுல நொந்து போயிட்டோம். வேற வேற தொழிலுக்கு மாறினோம். இப்ப மறுபடியும் செக்கு எண்ணெய் மேல உள்ள நம்பிக்கை வளர ஆரம்பிச்சு எங்களை நோக்கி மக்கள் வர ஆரம்பிச்சிருக்காங்க” என்றவருக்கு பின்னால் மின்சார உதவியோடு செக்கில் எண்ணெய் ஆட்டப்பட்டுக்கொண்டிருந்தது.

‘‘எள்ளை நல்ல தரம் பார்த்து வாங்கிட்டு வந்து வெயிலில் காய வெச்சு அரைப்போம். 100 கிலோ எள்ளு அரைக்க 10 மணி நேரம் ஆகிடும்.

10 கிலோ எள்ளுக்கு ஒரு கிலோ நாட்டு வெல்லம் சேர்த்துக்குவோம். அப்பத்தான் எண்ணெய் நல்லா பிரிஞ்சு வரும். நாள்பட்டாலும் சிக்கு வாடை அடிக்காம நல்லபடியா இருக்கும். 100 கிலோ எள்ளுக்கு 40 லிட்டர் நல்லெண்ணெயும், 58 கிலோ புண்ணாக்கும் கிடைக்கும். சிலர், கருப்பட்டி போட்டு ஆட்டிய நல்லெண்ணெய்தான் வேணும்னு குறிப்பா கேப்பாங்க. அவங்களுக்கு இதே மாதிரி அளவுல 100 கிலோவுக்கு 10 கிலோ பனங்கருப்பட்டி போட்டு ஆட்டித்தருவோம். எள்ளுப்புண்ணாக்கு 40-50 ரூபாய்க்கு விற்கிறது” என்றவர் #தேங்காய் #எண்ணெய் தயாரிக்கும் விதம்பற்றியும் சொன்னார்.

“தேங்காயை 3 வாரம் காயவெச்சு கொப்பரைத் தேங்காயாக மாத்துவோம்.  100 கிலோ கொப்பரைத் தேங்காயை 6 மணி நேரத்தில் ஆட்டிடலாம். 30 கிலோ தேங்காய்க்கு 1 கிலோ வெல்லம் கணக்கு வெச்சுப்போம். எலுமிச்சம்பழம் 100 கிலோவுக்கு 8 பழம் சேர்க்கணும். அப்பத்தான் தேங்காய் எண்ணெய் சீக்கிரமா கெட்டுப்போகாது. நல்ல வாசனையாகவும் இருக்கும். நிலக்கடலையை அதன் ஓட்டோட வாங்கி வந்து காய வைப்போம். அதுக்கப்புறம் அதன் ஓட்டைப் பிரிச்சு கடலையை மட்டும் காய வைச்சு ஆட்டி கிடைக்கிறது #கடலை #எண்ணெய். கடலையை 8 மணி நேரத்தில் 100 கிலோ வரைக்கும் ஆட்டி எடுத்தா 40 லிட்டர் எண்ணெயும், 59 கிலோ புண்ணாக்கும் கிடைக்கும். பொதுவா செக்குல ஆட்டுற எண்ணெயில் அந்த தானியங்களுக்கே உரிய வாசனை அரைச்சு கிடைக்கிற எண்ணெயிலேயும் கிடைக்கும்” என்றபடி அரைக்கும் எள்ளின் பதம் பார்க்கத் துவங்குகிறார் மஞ்சு.

நம் கண் முன்னே அரைத்து கிடைக்கும் ஒரு எண்ணெயை வாங்கி உபயோகிப்பதால் நல்லது கிடைக்கும் என்றால், செய்யலாம்தானே!

RKR EDIBLE OIL
VEERAPANDI
9543513136, 9750013136

1 comments so far

“It is also rich in antioxidants, which boosts immunity.mara check oil also retains lauric acid, which has plenty of therapeutic benefits.


EmoticonEmoticon