Thursday, 15 December 2016

பொதுவா ரீஃபைண்டு எண்ணெயை ஏன் பயன் படுத்தக்கூடாது

Tags

பொதுவா ரீஃபைண்டு எண்ணெயை பயன்படுத்த வேண்டாம்னு சொல்றாங்க…..அப்படி அதுல என்ன இருக்கு…? ஏன் பயன் படுத்தக்கூடாது..? பயன்படுத்துனா என்ன ஆகும்..? எப்படி அதை தயார் பண்றாங்க..? அப்புறம் இந்த எண்ணெய்ல கொழுப்பு அதிகம் அதுல கொழுப்பு கம்மி ..அது இதுன்னு ஆயிரம் விஷயம் கேள்விப் படுறோம்.. எதை நம்புறது?? எந்த எண்ணெய் உடம்புக்கு நல்லது…?? ஒரே குழப்பமா இருக்கு

முதல்ல எண்ணெயோட ஒரு குட்டி வரலாற தெரிஞ்சிக்குவோம்….. நம்ம முன்னோர்கள்லாம் எப்படி எண்ணெய் எடுத்தாங்கன்னு பார்ப்போம்..

அந்த காலத்துல மாடுகளை பழக்கி, அதுல இருந்து கண்ணுகுட்டி குடிச்சது போக மீதமிருந்த பால்ல நெய் எடுத்து பயன் படுத்தினாங்க. அப்புறம் ஏதோ ஆர்வத்துல எள் விதைகளை நசுக்கி பார்த்தா அதுல இருந்து நெய் மாதிரி ஒரு திரவம் வருவதை கண்டுபிடிச்சு அதுக்கு எள்+நெய் எண்ணெய்னு பேர் வச்சுட்டாங்க. (எள்ளுண்ணா எண்ணெயா இருக்கணும்னா இதாங்க அர்த்தம் – நசுக்கி பார்த்தாலே நல்லா எண்ணெயும், நல்ல மணமும், வந்தா நல்ல எள்ளு)

இந்த எண்ணெயை எடுக்க அவங்க கண்டுபிடிச்ச மெஷின் தாங்க ‘செக்கு. கீழ கல்லுலயோ மரத்துலயோ செஞ்ச ஒரு உரலை வடிவமைச்சு, உரலுக்குள்ள ஒரு மரத்தால செஞ்ச உலக்கையை நிக்க வச்சு, ஒரு மாட்டை இந்த உலக்கையோட இணைச்சு,மெதுவா மாட்டை சுத்தவிட்டு , எள்விதைகளை செக்குல போட விதையெல்லாம் உரலுக்கும் உலக்கைக்கும் நடுவுல “நசுங்கி எண்ணெய் வந்துச்சு, வெயில்ல தெளிய வச்சு கசடெல்லாம் வடிகட்டி ஈரப்பதம் படாம ஒரு வருஷத்துக்கும் வச்சு பயன் படுத்துனாங்க. இந்த எண்ணெய் சீக்கிரம் பிரியவும், எள்ளோட உஷ்ணம் குறையவும் பனங்கருப்பட்டி சேர்த்தாங்க. இந்த எண்ணெய் எடுத்ததுபோக மீதி கிடைக்குற புண்ணாக்கை மாட்டுக்கு உணவா கொடுத்தாங்க..

இந்த எண்ணெயோட பயன்பாட்டுல உடல்நலம் நல்லா இருக்குறதை கவனிச்சு, அதிலும் குறிப்பா மனச்சோர்வை நீக்கி “நல்ல எண்ணங்களை வளர வைத்ததால இந்த எள் நெய்க்கு நல்லெண்ணெய்னு பேரு வச்சிட்டாங்க.

அதுக்கு அப்புறம் எண்ணெய்ங்குறது பொதுப் பெயரா போச்சு..எந்த விதையில இருந்து நெய் எடுத்தாலும் அது அந்த விதை எண்ணெய் ஆயிருச்சு. தேங்காய்ல நெய் எடுத்தா தேங்காய் எண்ணெய், வேப்பங்கொட்டைல நெய் எடுத்தா வேப்ப எண்ணெய், இலுப்பைல எடுத்தா இலுப்ப எண்ணெய்..இப்படி பல எண்ணெய்கள்..

இந்த நல்லெண்ணெய் கிட்டத்தட்ட 5000 வருஷமா நம்ம பயன்பாட்டுல இருக்குங்க… அதுபோக சரகர் என்கிற ஆயுர்வேத ஞானி அவருடைய சரகசம்ஹிதைங்குற புத்தகத்துல என்ன சொல்லிருக்கார்னா, தாவரங்கள்ல இருந்து கிடைக்கிற எல்லா எண்ணெய்களிலும் ரொம்ப சிறந்தது நல்லெண்ணெய் தான்னு சொல்லிருக்காரு. நவீன ஆராய்ச்சிகள்ள கூட நல்லெண்ணெய்ல உள்ள நுண்சத்துக்கள் மனச்சோர்வுக்கும், புற்றுநோய்க்கும், இதய நோய்களுக்கும் நல்ல மருந்துன்னு மட்டுமல்லாமல் உடல் இளமையா இருக்கவும் உதவுதுன்னு கண்டுபிடிச்சிருக்காங்க.

இதே மாதிரி தான் தேங்காய் எண்ணெயும் கிட்டத்தட்ட 4000 வருஷமா பயன்பாட்டுல இருக்கு. இந்த தேங்காய் எண்ணெய்ல இருக்குற லாரிக் அமிலம் நம்ம உடம்புக்குள் சென்றதும் மோனோலாரின் அப்படிங்குற அமிலமா மாறிருது. இந்த மோனோலாரின் வேறு எங்க கிடைக்கும்னா தாய்ப்பால்ல மட்டும் தானாம். அதுபோக தேங்காய் எண்ணெய் நம்ம வாய் எச்சில்லையே ஜீரணம் ஆகிறும். 6 மாத குழந்தைக்கு கூட இதை கொடுக்கலாம்.

ஆனால் சமீபமா ஒரு 30 – 40 வருஷத்துக்கு முன்னாடி இந்த எண்ணெய்கள்லாம் சாப்டா இதய பிரச்சனை வரும்னும், உடம்புக்கு நல்லதில்லைன்னும் ஒரு பிரச்சாரம் பண்ணி நம்மள நாம காலங்காலமா பயன்படுத்தின எண்ணைகளையே மறக்க வச்சிட்டாங்க.

 சமையலுக்கு பயன்படுத்துற மிளகு, சீரகம் அது இதுன்னு எதையெடுத்தாலும், தனித்தனியா இருக்கும் போது வாசம் கம்மியாதாங்க இருக்கும். ஆனால், சமைக்கும் போது சூட்டுல வாசம் கமகமக்கும் இல்லீயா? அதே மாதிரி தாங்க பாரம்பரிய செக்கு எண்ணெயும். ரொம்ப சூடு ஆகாததனால, நல்லா அடர்த்தியா இருக்குறதோட, மணமும் கம்மியாதாங்க வரும். ஆனா, சமைக்கும் போது, சூடேறும் போது தான் அற்புதமா மணம் வீசும். சமைக்கப்படாம உயிரோட இருக்கேன்னு நிரூபிக்க பொங்கிப் பொங்கி வரும்ங்க.


EmoticonEmoticon